search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிப்பட்டு மாணவி கொலை"

    பள்ளிப்பட்டு அருகே 10-ம் வகுப்பு மாணவியை பம்புசெட்டில் 5 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்து கொன்றது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டை அடுத்த வெங்கடாபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி பள்ளிக்கு சென்றபோது மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கிச்சலம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் உள்ள ஓடையில் மாணவியின் எலும்புக்கூடுகளும், பள்ளி சீருடையும் கிடந்தது. அவர் அணிந்திருந்த கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவையும் கிடைத்தன.

    இதையடுத்து மாயமான மாணவி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார் எலும்புக் கூடுகளை சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மாணவி கொலையில் அதே கிராமத்தை சேர்ந்த சங்கரய்யாவை போலீசார் கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின்படி கீச்சலத்தை சேர்ந்த கரும்பு தோட்ட உரிமையாளர் நாதமுனி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ், மோகன்ராஜ் ஆகிய 4 பேரையும் அதிரடியாக பிடித்தனர்.

    அவர்கள் அனைவரும் சேர்ந்து மாணவியை பம்புசெட்டில் அடைத்து வைத்து கொடூரமாக கற்பழித்து கொலை செய்து இருப்பதும், பின்னர் உடலை புதைத்ததும் தெரியவந்தது.

    கொலையுண்ட மாணவியை சங்கரய்யா ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் மாணவி இந்த காதலை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி மாணவியிடம் சங்கரய்யா பேச்சு கொடுத்தார். அப்போது அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் உனது நண்பர் ஒருவர் சந்திக்க காத்து இருப்பதாக மாணவியிடம் தெரிவித்தார்.

    இதனை நம்பிய மாணவி கரும்பு தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சங்கரய்யா மாணவியை மிரட்டி அருகில் உள்ள பம்புசெட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்தார். பின்னர் பம்புசெட்டை வெளிப்புறமாக மூடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதைத் தொடர்ந்து பயந்து போன சங்கரய்யா மாணவியை கற்பழித்தது குறித்து ஜெகதீசிடம் தெரிவித்து இருக்கிறார். இதனால் சபலம் ஏற்பட்ட ஜெகதீஷ் மாணவி குறித்து நண்பர்களான நாதமுனி, கிருஷ்ண மூர்த்தி, மோகன் ராஜ் ஆகியோரிடமும் கூறி இருக்கிறார்.

    அவர்கள் 4 பேரும் பம்பு செட்டுக்கு வந்து மாணவியை மாறி மாறி கற்பழித்தனர். இந்த கொடூரம் தொடர்ந்து 5 நாட்களாக நடந்துள்ளது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாதமுனி உள்பட 4 பேரும் மாணவி இறந்தது குறித்து வெளியில் தெரிவிக்காமல் இருக்க சங்கரய்யாவிடம் கெஞ்சி கேட்டுள்ளனர். இதற்காக ரூ. 5 ஆயிரமும் கொடுத்ததாக தெரிகிறது.

    பின்னர் 5 பேரும் சேர்ந்து மாணவியின் உடலை கரும்பு தோட்டத்தில் புதைத்தனர். மாணவி மாயமான விவகாரத்தில் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இதற்திடையே அந்த கரும்பு தோட்டத்தில் அறுவடை நடக்க இருந்தது. இதனால் மாணவி உடலை புதைத்தது வெளியில் தெரிந்துவிடும் என்று நினைத்து அவர்கள் கலக்கம் அடைந்தனர்.

    இதனால் மாணவியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து அருகில் உள்ள கால்வாய் ஓரத்தில் புதைத்து இருக்கிறார்கள். உடலை ஆழமாக தோண்டி புதைக்காததால் மாணவியின் எலும்புக்கூடு வெளியே வந்துவிட்டது.

    இதனால் கொலையாளிகள் 5 பேரும் சிக்கிக் கொண்டனர். மாணவியை கொன்று புதைத்தது எப்படி? என்பது குறித்து சங்கரய்யா கொலை நடந்த இடத்தில் நடித்து காட்டினார்.

    அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த மாணவியின் புத்தக பையை போலீசார் மீட்டனர். கைதான 5 பேரிடமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    மாணவியை 5 நாட்கள் அடைத்து வைத்து கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பள்ளிப்பட்டு அருகே 10-ம் வகுப்பு மாணவி கரும்பு தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. கட்டிட மேஸ்திரி.

    இவரது மகள் சரிதா (வயது 15). அப்பகுதியில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி பள்ளிக்கு சென்ற சரிதா பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர், போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அருகில் உள்ள கீச்சலம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் மாணவி சரிதா கொன்று புதைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது எலும்புக் கூடு மற்றும் பள்ளிச்சீருடை இருந்தது.

    பொதட்டூர்பேட்டை போலீசார் மாணவியின் எலும்புக்கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அதில் சரிதாவின் கொலுசு, கம்மல் இருந்தன. திருவள்ளூர் மாவட்ட தடயவியல் நிபுணர் நளினா மற்றும் அதிகாரிகள் எலும்புகளை பரிசோதனை செய்தனர்.

    பின்னர் சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மாணவி கொலை தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    நிலத்தகராறில் மாணவி கொலை செய்யப்பட்டாரா? மாணவியுடன் நெருங்கி பழகியவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர். மாணவியின் தாயிடமும் விசாரணை நடக்கிறது.
    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாயமான மாணவி கொன்று புதைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15).

    10-ம் வகுப்பு மாணவியான இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திடீரென மாயமானார். அன்று காலையில் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்ற சரிதா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த சுப்பிரமணி உறவினர்களுடன் சேர்ந்து சரிதாவை பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து சுப்பிரமணி, மகள் சரிதா காணாமல் போனது பற்றி பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி சரிதாவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பின்னர் சரிதா மாயமான வழக்கை போலீசார் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் கீச்சளம் என்கிற கிராமத்தில் கரும்பு தோட்டத்தை ஒட்டியுள்ள கால்வாய் பகுதியில் இளம்பெண்ணின் எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. தலைமுடி பள்ளிச் சீருடை ஆகியவையும் சிதறி கிடந்தன.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பொதட்டூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். எலும்புக்கூட்டை கைப்பற்றி திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமுடி, சீருடை உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர். போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாயமான மாணவி சரிதா கொன்று புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    மாணவி சரிதா கொலை செய்யப்பட்டது ஏன்? அவரை கொலை செய்தது யார்? என்பது தெரியவில்லை. மாணவி சரிதா அணிந்திருந்த பள்ளி சீருடை தனியாக ஒரு பையில் சுற்றி வீசப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கும் போது, மாணவி நிர்வாணமாக புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    எனவே அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் எலும்புக் கூட்டை பரிசோதனை செய்தால்தான் மாணவி எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    மாணவி கொலை செய்யப்பட்டது பற்றி கேள்விப்பட்டதும், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    மாணவி சரிதாவை கொலை செய்த குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×